பிரம்மாஸ் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்ட விவகாரம்; 3 விமானப்படை அதிகாரிகள் பணி நீக்கம் !!

கடந்த மார்ச் 9ஆம் தேதியன்று இந்திய விமானப்படையின் பிரம்மாஸ் ஏவுகணை ஒன்று தவறுதலாக ஏவப்பட்டு பாகிஸ்தானில் போய் மோதி விபத்துக்குள்ளானது, இந்த சம்பவத்தில் உயர்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று விசாரணை முடிவு பெற்று தீர்ப்பு வெளியானது இதில் கவனக்குறைவாக செயல்பட்டு பிரம்மாஸ் ஏவுகணை போன்ற மிகவும் முக்கியமான தளவாடத்தை சரியாக கையாள்வதில் தவறு செய்த காரணத்தால் மூன்று இந்திய விமானப்படை அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஏவுகணைகளை கையாள விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரிவர பின்பற்றாமல் இருந்தததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது, பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று அதிகாரிகளும் இந்திய விமானப்படையின் அந்தஸ்து குறித்து தகவல்களும் வெளியாகி உள்ளது.

ஒரு க்ரூப் கேப்டன் (15-26 ஆண்டுகள் சேவை), ஒரு விங் கமாண்டர் (13 ஆண்டுகள் சேவை), ஒரு ஸ்க்வாட்ரன் லீடர் (6 ஆண்டுகள் சேவை) இது தான் அந்த அதிகாரிகளின் பணி விவரங்கள், இவர்களின் பணி நீக்க ஆணைகள் நேற்று உடனடியாக வழங்கப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.