தைவானுக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள 3 பிரமாண்ட அமெரிக்க போர் கப்பல்கள் !!
1 min read

தைவானுக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள 3 பிரமாண்ட அமெரிக்க போர் கப்பல்கள் !!

அமெரிக்க சபாநாயகர் நான்சியின் தைவான் பயணத்தையொட்டி ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து தைவானுக்கு மிக அருகே அமெரிக்க கடற்படையின் 3 பிரமாண்ட போர் கப்பல்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நமது INS விக்ரமாதித்யாவுக்கு இணையான USS AMERICA மற்றும் USS TRIPOLI ஆகிய இரண்டு நிலநீர் போர்முறை கப்பல்கள் மற்றும் அணுசக்தி விமானந்தாங்கி கப்பலான USS RONALD RAEGAN எனும் 1 லட்சம் டன்கள் எடை கொண்ட ராட்சத கப்பல் ஆகியவை தைவானுக்கு அருகே உள்ளன.

அதில் USS RONALD RAEGAN உடன் USS HIGGINS எனும் நாசகாரி கப்பலும், USS ANTIETAM எனும் ஏவுகணை க்ருசர் ரக கப்பலும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டை தாண்டி தைவானுக்கு மிக அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட USS RONALD RAEGAN கப்பலில் F/A-18, E/A-18, E2 போன்ற விமானங்களும், USS TRIPOLI, USS AMERICA மற்றும் USS RONALD RAEGAN ஆகிய மூன்று கப்பல்களிலுமே F35 போர் விமானங்கள் உள்ளன, இந்த 3 கப்பல்களிலும் உள்ள விமானங்களின் எண்ணிக்கையே 120க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.