1 min read
ரஜோரி ராணுவ முகாமில் தாக்குதல் பொறுப்பேற்ற கையோடு காஷ்மீரில் நடைபெறும் G20 மாநாட்டை தாக்க எச்சரிக்கை !!
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற காஷ்மீர் பயங்கரவாத அமைப்பான PAFF – People’s Anti Fascist Front சமீபத்தில் ரஜோரி ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI உதவியுடன் வெளியிடப்பட்ட இந்த காணொளியில் ரஜோரி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற கையோடு இந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள G20 மாநாட்டை நடத்த விட மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது அந்த அமைப்பு.
ரஜோரி ராணுவ முகாம் மீது மேற்குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பு நடத்திய ஃபிதாயீன் தாக்குதலில் ராஜஸ்தானை சேர்ந்த 2 வீரர்களும், ஹரியானாவை சேர்ந்த 1 வீரரும் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த 1 வீரரும் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.