ஜம்மு காஷ்மீரின் ராஜோரி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர்.நௌசேரா செக்டாரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குவாட்காப்டர் உதவியுடன் இந்த பகுதி தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இருளை துணையாக கொண்டு எல்லையில் உள்ள புகார்னி கிராமத்தின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர்.
ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவன் அங்கிருந்த கண்ணிவெடி மீது கால்வைத்ததில் அது பயங்கரமாக வெடித்துள்ளது.இது நடந்தது திங்கள் இரவு 10 மணிக்கு.
ஊடுருவிய பயங்கரவாதிகள் பாக்கைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.