இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் தாக்குதல்; கர்ப்பிணி உட்பட பலர் காயம் !!

  • Tamil Defense
  • August 18, 2022
  • Comments Off on இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் தாக்குதல்; கர்ப்பிணி உட்பட பலர் காயம் !!

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமிர் சிதாவி என்பவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 1 கர்ப்பிணி உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

அந்த 8 பேரில் இருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்ப்பட்டது மேலும் காயமடைந்த கர்ப்பிணியின் நிலை மோசமானதை தொடர்ந்து ஆபரேஷன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து இஸ்ரேலிய காவல்துறையினர் சல்லடை போட்டு தேடியதையடுத்து குற்றவாளி ஆயுதத்துடன் சரணடைந்தான் அவனை கைது செய்த காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர், அவனது உறவினர் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான், அமிர் ஏற்கனவே குற்ற பின்னனி கொண்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.