சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாத குழுக்கள் மூலமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,
தலைநகர் தில்லியில் தில்லி காவல்துறை உதவியுடன் பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ வழிகாட்டலின்படி இயங்கி வந்த பயங்கரவாத குழு ஒன்றை கூண்டோடு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் கைபற்றி உள்ளதாகவும் பஞ்சாப் காவல்துறை தலைவர் கவுரவ் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கைதான நால்வரிடமும் இருந்து 3 கையெறி குண்டுகள், 2 கைதுப்பாக்கிகள், 2.5 கிலோ காந்த கண்ணிவெடி மற்றும் 3 கிலோ RDX வெடிபொருள் ஆகியவை கைப்பற்றபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.