ஜனாதிபதியின் கொடியை பெற்ற தமிழக காவல்துறை !!
நாட்டின் ராணுவ படைப்பிரிவுகள், துணை ராணுவ படைப்பிரிவுகள், மாநில காவல்துறைகள் ஆகியவற்றிற்கு சிறப்பான நீண்ட கால சேவையை பாராட்டு ஜனாதிபதியின் கொடி வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் சமீபத்தில் தமிழக காவல்துறை அத்தகைய சிறப்பை பெற்றுள்ளது.
உத்தர பிரதேசம், தில்லி, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், திரிபுரா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, அஸ்ஸாம் ஆகிய மாநில காவல்துறைகளுக்கு பிறகு 10 ஆவது காவல்துறையாக தமிழக காவல்துறை ஜனாதிபதியின் கொடியை பெற்று வரலாற்று சிறப்புமிக்க இடத்தை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெற்றுள்ளது.
சென்னை எழும்புர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு க ஸடாலின், தலைமை செயலாளர் இறையன்பு இ.ஆ.ப, காவல்துறை படை தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அவர், தமிழக கொண்டு காவல்துறை வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்து பாராட்டு பேசினார்.