அமெரிக்காவிடம் இருந்து MQ-9B ட்ரோன்கள் களமிறக்கம்- பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
அமெரிக்காவிடம் இருந்து மூன்று பில்லியன்கள் டாலர் செலவில் 30 MQ-9B Predator ட்ரோன்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சீனாவுடனான எல்லை மற்றும் பரந்து விரிந்துள்ள இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க இந்த ட்ரோன்கள் நமது பாதுகாப்பு படைகளுக்கு உதவும்.
கடல்சார் ரோந்து பணிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான தரை இலக்குகளை தாக்கியழித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்த ட்ரோன் உபயோகமாக இருக்கும்.
MQ-9 reaper ட்ரோன்களின் ஒரு ரகம் தான் இந்த MQ-9B ட்ரோன்கள் ஆகும்.கடந்த 2020ல் இந்திய கடற்படை இரு ட்ரோன்களை ஒரு வருட குத்தகைக்கு எடுத்தது.இதன் காலம் பின்பு நீட்டிக்கப்பட்டது.
இந்த ட்ரோன்கள் விற்பனை தொடர்பான பிரச்சனைகளை இரு நாட்டு அரசுகளும் பேசி தீர்வு கண்டு வருகின்றனர்.