
இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆஃப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தாய்நாடு திரும்பிய நிலையில் அவர்களை அங்கு தாலிபான்கள் வரவேற்று உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த 25 இளம் ஆஃப்கன் ராணுவ அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி நாடு திரும்பினர்.
காபூல் விமான நிலையத்தில் அவர்களை தாலிபான் பிரதிநிதிகள் வரவேற்றனர், மேலும் அவர்களின் உயிர்களுக்கு உறுதி அளித்தும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் தாலிபான்கள் தெரிவித்தனர்.
அனேகமாக இவர்கள் அனைவரும் தாலிபான் தலைமையிலான ராணுவத்தில் பணியமர்ப்படுவர் என கூறப்படுகிறது தாலிபான்களின் இந்த செயல்பாடு இந்தியாவுடன் நெருக்கம் காட்டு விரும்புவதை குறிப்பதாக உள்ளது என்றால் மிகையல்ல.
இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆஃப்கன் ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்த நிலையில் அவர்கள் நாடு திரும்ப சம்மதித்தனர்.
இந்தியாவில் பயிற்சி பெற்ற பல ஆஃப்கன் ராணுவ அதிகாரிகள் நாடு திரும்ப விரும்பாத நிலையில் பலர் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் அவர்களில் சிலர் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் தஞ்சம் கோரியதும் குறிப்பிடத்தக்கது.