
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைபடை தாக்குதலில் தாலிபான் மத தலைவரான ஷேக் ரஹிமுல்லாஹ் ஹக்கானி கொல்லப்பட்டார்.
இந்த தகவலை ஆஃகானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமீ உறுதிபடுத்தி உள்ளதாக டோலோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஒரு மத கருத்தரங்கு நடைபெற்ற போது நிகழ்த்தப்பட்டுள்ளது, காலை இழந்த ஒருவர் செயற்கை காலுக்கு உள்ளே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு மூலம் இதனை நடத்தியுள்ளார்.
தற்போது வரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை ஆனால் இதற்கு பின்னால் ISIS அமைப்பு இருப்பதாக பரவலாக சந்தேகம் எழுந்துள்ளது காரணம் தாலிபான்களுக்கும் ISIS அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.