ஆஃப்கன் வான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஊடுருவ அனுமதிப்பதாக பாகிஸ்தான் மீது தாலிபான்கள் குற்றச்சாட்டு !!

தாலிபான் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரான மூல்லா யாகூப் பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் வான் பகுதிக்குள் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஊடுருவ அனுமதி அளிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூல்லா யாகூப் ஆளில்லா விமானங்கள் ஊடுருவம் பகுதிகளை கணக்கெடுத்து வருவதாகவும், பாகிஸ்தான் வழியாக தான் அவை வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசும்போது பாகிஸ்தான் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவுவதை பாகிஸ்தான் அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.

2021ல் பன்னாட்டு படைகள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய போது ரேடார் அமைப்புகளை அழித்து சென்றதாகவும், பிற நாடுகள் ஆஃகன் மண்ணில் விட்டு சென்றுள்ள ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லவும் கோரிக்கை வைத்தார்.