தன்னிடம் உள்ள அதிநவீன போர் விமானத்தை பயிற்சியில் ஈடுபடுத்திய தைவான் !!
மிகவும் அரிதான நிகழ்வாக தைவான் விமானப்படை தன்னிடம் உள்ள அதிநவீன போர் விமானமான அமெரிக்க தயாரிப்பு F-16V ரக போர் விமானத்தை இரவு நேர பயிற்சிகளில் ஈடுபடுத்தி உள்ளது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் சென்ற பிறகு சீனா கோபமுற்று தைவானை சுற்றி வளைத்து கடற்படை மற்றும் விமானப்படைகளை அனுப்பி தைவானை அச்சுறுத்தும் விதமாக போர் பயிற்சிகளை நடத்தி வருகிறது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனை தொடர்ந்து தைவானுடைய முப்படைகளும் சீனா படையெடுத்தால் அதனை எப்படி தடுப்பது என்பது சார்ந்த ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இந்த பயிற்சிகளின் ஒரு பகுதியாக தான் இந்த அதிநவீன F-16V ரக போர் விமானத்தை இரவு நேர பயிற்சிகளில் தைவான் விமானப்படை களமிறக்கியுள்ளது.
தைவான் நாட்டின் கிழக்கு ஹூவாலியென் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 6 F-16V ரக போர் விமானங்கள் இரவு நேர கண்காணிப்பு பயிற்சிகள் மேற்கொள்ள புறப்பட்டன அவற்றில் இரண்டு விமானங்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.