சீன ஏவுகணைகளை கண்காணிக்க தைவானுக்கு உதவிய அதிநவீன தொலைதூர ரேடார் !!

சீனா தனது ஐந்து நாள் போர் ஒத்திகைகளின் ஒரு பகுதியாக ஏவிய ஐந்து டாங் ஃபெங் Dong Feng ஏவுகணைகளை தைவான் வெற்றிகரமாக கண்காணிப்பதற்கு உதவியது ஒரு அதிநவீன ரேடார் ஆகும்.

அதாவது 2000ஆவது ஆண்டில் பனிப்போர் காலகட்ட தொலைதூர ரேடார் ஆன AN/FPS-115 PAVE PAWS ரேடாரை விற்பனை செய்தது இந்த ரேடார் 2013ஆம் ஆண்டில் செயல்பாட்டில் உள்ளது.

சுமார் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ரேடார் சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவு வரை கண்காணிக்க கூடியது, விமானங்கள் ஏவுகணைகள் என அனைத்தையும் துல்லியமாக கண்காணிக்கும் திறனை இது கொண்டுள்ளது.

தைவான் நாட்டின் ஷின்சூஸ் லெஷான் பகுதி உயரமான பகுதியாகும் இங்கு அமைந்துள்ளதால் இந்த ரேடாரால் கடற்பரப்பில் உள்ள கப்பல்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த ரேடாரின் கண்காணிப்பு திறன் மூலமாக பெற்ற தகவல்களை தைவான் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இதர சில நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த AN/FPS-115 PAVE PAWS ரேடாரை பாதுகாக்கும் வகையில் Sky Bow III வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் 35 mm விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் ஆகியவற்றை நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.