சீன ஆளில்லா விமானத்தை கல் எறிந்து தாக்கிய தைவான் வீரர்கள் !!

  • Tamil Defense
  • August 26, 2022
  • Comments Off on சீன ஆளில்லா விமானத்தை கல் எறிந்து தாக்கிய தைவான் வீரர்கள் !!

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தைவான் நாட்டு ராணுவத்துடைய லெயூ பட்டாலியன் இருக்கும் முகாம் மீது ஒரு ஆளில்லா விமானம் மாலை 6 மணியளவில் பறக்க துவங்கி அந்த பகுதியில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆளில்லா விமானத்தை கண்ட தைவானிய வீரர்கள் இருவர் ஆளில்லா விமானத்தை நோக்கி ரேடியோ மூலமாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பினர் அவர்களில் ஒருவர் விமானத்தை புகைப்படம் எடுக்க தனது கேமிரா மூலமாக முயற்சி செய்துள்ளார்.

இவையனைத்தும் அந்த ஆளில்லா விமானம் எடுத்த புகைப்படங்களில் பதிவாகி உள்ளது, சீனாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தைவானுக்கு சொந்தமான கின்மென் தீவில் இது நிகழ்ந்துள்ளது.

தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தைவான் ராணுவம் மேற்குறிப்பிட்ட ஆளில்லா விமானம் எல்லையை கடக்காத காரணத்தால் அதனை தாக்கவில்லை எனவும் ஆனால் அதன் கேமரா ஒரு பிரத்தியேக லென்ஸை கொண்டுள்ள காரணத்தால் 1 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆனால் மற்றோரு வீடியோ ஒன்றில் தைவான் வீரர்கள் சீன ஆளில்லா விமானம் ஒன்றின் மீது கல் வீசி தாக்குவதை காட்டுகிறது அதாவது அந்த ட்ரோன் எடுத்த வீடியோ தான் அது இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகளா அல்லது வேறு வேறு நிகழ்வுகளா என்பது தெரியவில்லை.