நிலத்தடி Underground போர் விமான தளங்களின் படங்களை வெளியிட்ட தைவான் !!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on நிலத்தடி Underground போர் விமான தளங்களின் படங்களை வெளியிட்ட தைவான் !!

தைவானிய விமானப்படை மிகவும் அரிதாக தனது நிலத்தடி underground போர் விமான தளத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த விமான தளத்தில் தைவானிய விமானப்படையில் உள்ள அதிநவீன போர் விமானங்களான F-16 போர் விமானங்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது சியாஷான் விமானப்படை தளம் எனவும் இங்கு நிலத்தடி போர் விமான தளங்கள் உள்ளன எனவும் இங்கு 5ஆவது படையணி வீரர்கள் விமானங்களில் குண்டுகளை ஏற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

சீன படையெடுப்பை முறியடிக்கும் வகையிலான போர் ஒத்திகையான Han Kuang தைவானிய விமானப்படை ஈடுபட்ட போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு F -16 Viper போர் விமானத்தில் AGM – 84L HARPOON கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, AIM-120C விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை தைவானிய வீரர்கள் பொருத்தினர்.