தைவான் ஏவுகணை திட்ட தலைமை விஞ்ஞானி மரணம் !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on தைவான் ஏவுகணை திட்ட தலைமை விஞ்ஞானி மரணம் !!

தைவான் நாட்டின் ஏவுகணை திட்டத்தின் தலைவரான ஓ யாங் லி ஹெசிங் ஒரு ஒட்டல் அறையில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்க பட்டுள்ளார்.

ராணுவ பிண்ணணி கொண்ட இவர் அந்நாட்டின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் துணை தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது ஒட்டல் அறையில் எந்தவித சந்தேகத்துக்கு இடமான அடையாளங்களும் காணப்படவில்லை.

அவரது குடும்பத்தினர் அவருக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததாக கூறிய நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.