ஏவுகணை தயாரிப்பை இரட்டிபாக்க முடிவு செய்துள்ள தைவான் !!

  • Tamil Defense
  • August 14, 2022
  • Comments Off on ஏவுகணை தயாரிப்பை இரட்டிபாக்க முடிவு செய்துள்ள தைவான் !!

தைவான் தேசிய சுங் ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் Taiwan National Chung Shan Institute of Science & Technology அந்நாட்டின் மிகப்பெரிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், இது அரசுத்துறை நிறுவனமாகும்.

தற்போது இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆறு வெவ்வேறு வகையான 200 ஏவுகணைகளை தயாரித்து வரும் நிலையில் இதனை ஆண்டுக்கு 500 ஆக அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ உள்ளது.

அந்த வகையில் Sky Sword 2 ஏவுகணையின் தயாரிப்பு 40ல் இருந்து 150ஆகவும், Sky bow 3 வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் தயாரிப்பை 48ல் இருந்து 96ஆகவும், Hsiung Feng III ஏவுகணையின் தயாரிப்பு 20ல் இருந்து 70ஆகவும், Hsiung Feng II மற்றும் Hsiung Sheng ஏவுகணைகளின் தயாரிப்பு 81ல் இருந்து 131ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும் Wan Chien தரை தாக்குதல் ஏவுகணையின் தயாரிப்பு ஆண்டுக்கு 18 முதல் 50ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது இப்படி ஒட்டுமொத்தமாக ஆண்டோன்றுக்கு சுமார் 497 ஏவுகணைகள் வரை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது, இதற்கு சீனாவின் செயல்பாடுகள் காரணம் என்றால் மிகையல்ல.