நாட்டு மக்களை போருக்கு தயாராக அறிவுறுத்தும் தைவான் !!

  • Tamil Defense
  • August 2, 2022
  • Comments Off on நாட்டு மக்களை போருக்கு தயாராக அறிவுறுத்தும் தைவான் !!

தைவானில் நாடு முழுவதும் சைரன்கள் ஒலிக்க, மக்கள் பங்கர்களுக்கு அனுப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன இப்படி தைவான் அரசு நாட்டு மக்களை போருக்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறது.

சீனா தைவான் தனக்கு உரிய பகுதி என உரிமை கோருவது மட்டுமின்றி தைவானை ராணுவ பலத்தை உபயோகித்து தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதையும் தயக்கமின்றி செய்வோம் என மிரட்டல் மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

தற்போது அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவானுக்கு சுற்றுபயணமாக செல்வது சீனாவை மிகவும் கடுப்பேற்றி உள்ளது இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்த கையோடு போர் ஒத்திகைகளையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தைவான் அரசும் அனைத்து ராணுவ வீரர்களுக்கான விடுமுறைகளை ரத்து செய்துள்ளதோடு மட்டுமின்றி வான் பாதுகாப்பு படையணிகளையும் நகர்த்தி ஒட்டுமொத்த ராணுவத்தையும் போருக்கு தயாராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.