சீனாவுக்கு போட்டியாக போர் ஒத்திகையை அறிவித்த தைவான் !!

  • Tamil Defense
  • August 9, 2022
  • Comments Off on சீனாவுக்கு போட்டியாக போர் ஒத்திகையை அறிவித்த தைவான் !!

சீன படையெடுப்பு நிகழ்ந்தால் அதனை முறியடிப்பதற்கான போர் ஒத்திகையை தைவான் ராணுவம் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பிங்டூங் மாவட்டத்தில் துவங்கி உள்ளது.

தைவான் தரைப்படையின் 8ஆவது கோர் படைப்பிரிவின் செய்தி தொடர்பாளர் லூ வொய் ஜய் காலை 6.10 மணியளவில் போர் ஒத்திகை துவங்கியதாகவும் 7 மணிக்கு முடிவுற்றதாகவும் தெரிவித்தார்.

இந்த போர் ஒத்திகையில் 40 பிரங்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பங்கு பெறுவதாகவும் நிஜ ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.