காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்ட தமிழக வீரர் !!

  • Tamil Defense
  • August 12, 2022
  • Comments Off on காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்ட தமிழக வீரர் !!

நேற்று காலை காஷ்மீரில் தர்ஹால் பகுதியில் ராணுவ முகாமில் ஊடுருவி இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர் அவர்கள் இருவரும் கொல்லப்பட்ட நிலையில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அவர்களில் தமிழகத்தின் மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரைஃபிள்மேன் டி லஷ்மணன் வீரமரணம் அடைந்தார், இவர் ராஜ்புதானா ரைபிள்ஸ் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தார்.

இவரது மரண செய்தியால் புதுப்பட்டி கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னனி கொண்டதாகும், தந்தை நடக்க முடியாத நிலையிலும் தாய் காது கேளாத நிலையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது சகோதரி பாமாபிரியா பேசும்போது தனது சகோதரர் நாட்டுக்காக வீரமரணம் அடைந்தது பெருமையாக உள்ளதாகவும், லஷ்மணன் தான் குடும்பத்தை காபாற்றி வந்ததாகவும் தெரிவித்தார்.

லஷ்மணன் உடைய சகோதரர் தனது சகோதர் உடைய தியாகத்தை நினைத்து பெருமை கொள்வதாகவும் தானும் ராணுவத்தில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

லஷ்மணன் அவர்களுடைய தந்தையார் பேசும் போது தனது இளைய மகனையும் நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.