கல்வானில் முதலில் கடத்தப்பட்டு, சீனர்களுக்கு சிகிச்சை அளிக்க வைத்து பின்னர் கொல்லப்பட்ட இந்திய வீரர் !!
1 min read

கல்வானில் முதலில் கடத்தப்பட்டு, சீனர்களுக்கு சிகிச்சை அளிக்க வைத்து பின்னர் கொல்லப்பட்ட இந்திய வீரர் !!

கல்வான் மோதல் நடைபெற்று சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகியுள்ள Indias Fearless புத்தகத்தின் மூன்றாம் பாகத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் வெளியாகி உள்ளன.

ஷிவ் ஆரூர் மற்றும் ராகுல் சிங் ஆகியோர் எழுதிய இந்த புத்தகத்தில் கல்வான் மோதலில் சீனர்கள் செய்த மிகவும் மோசமான செயல் ஒன்று தற்போது விவரிக்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலில் வீரமரணம் அடைந்து நாட்டின் இரண்டாவது உயரிய வீரதீர விருதான வீர் சக்ராவை அளித்து கவுரவிக்கப்பட்ட நாயக் தீபக் சிங்கின் கதை தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் சண்டை நடைபெற்று கொண்டிருந்த போது காயமடைந்த இந்திய வீரர்கள் மற்றும் சீன வீரர்களுக்கு பாகுபாடு இன்றி சுற்றிலும் நிலைமை தீவிரமாக இருந்த நிலையிலும் அசராமல் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளித்தார்,

இந்த நிலையில் அவரை சிறைப்பிடித்த சீன படையினர் அவரை தங்களது முகாமுக்கு கொண்டு சென்று அங்கு காயமடைந்த சீன வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளனர் பின்னர் அவரை கொன்றுள்ளனர்.

நாயக் தீபக் சிங் சுமார் 30 இந்திய ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார் ஆனால் அவரால் எத்தனை சீன வீரர்கள் உயிர் பிழைத்தனர் என்பது பற்றிய தகவல் இல்லை.