இந்திய ஜவான்களின் கதைகள் பாடத்திட்டத்தில் இடம்பெறும் மத்திய கல்வி அமைச்சர் !!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கல்வி பாடத்திட்டத்தில் இந்திய ஜவான்களின் வீரக்கதைகள் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட “வீர கதை” எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நாட்டின் மீதான பற்றை உட்புகுத்தும் விதமாகவும் , சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டியும் இதனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சுதந்திர தின அமுத பெருவிழா நாளை முன்னிட்டு நடைபெற்ற வீர கதை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 25 பேருக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

கடந்த அக்டோபர் 21 துவங்கிய இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 4,788 பள்ளிகளை சேர்ந்த 804,000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அவர்களில் சிறப்பாக கதைகளை கட்டுரைகள் கவிதைகள் படங்கள் மூலமாக விவரித்த 25 பேர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.