750 மாணவிகள் தயாரித்த 75 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய உள்ள SSLV !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on 750 மாணவிகள் தயாரித்த 75 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய உள்ள SSLV !!

வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரோ அமைப்பு தயாரித்ததிலேயே மிகவும் சிறிதான SSLV ராக்கெட் விண்ணில் பாய உள்ளது, நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் முக்கிய நிகழ்வாக இது அமைய உள்ளது என்றால் மிகையல்ல.

இந்த ராக்கெட் நாடு முழுவதும் உள்ள 75 கிராமப்புற பள்ளிகளில் பயிலும் 750 மாணவிகள் உருவாக்கிய 75 சிறிய செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய உள்ளது என்பது தான் இதன் சிறப்பு ஆகும்.

120 டன்கள் எடை கொண்ட இந்த SSLV ராக்கெட் 34 மீட்டர் உயரம் கொண்டதாகும் 500 கிலோ அளவிலான சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நோக்கில் இதனை இஸ்ரோ தயாரித்தது குறிப்பிடத்தக்கது.