ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே !!

ஒரே சீனா கொள்கைக்கு இலங்கை தனது முழு ஆதரவை தெரிவிப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதாவது இலங்கைக்கான சீன தூதர் கி ஸென்ஹாங் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒரே சீனா கொள்கை மற்றும் எல்லையோர இறையாண்மை ஆகியவற்றிற்கு இலங்கையின் ஆதரவை அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு நாடும் பிறநாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது எனவும், மற்ற நாடுகளை சீண்ட கூடாது எனவும் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனாவுக்கு மிகப்பெரிய அளவில் கடனை திருப்பி கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதும், சுமார் 51பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுடன் நாடு திவாலாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.