ஒரே சீனா கொள்கைக்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்த நிலையில் சீனாவின் Yuan Wang 5 எனும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகம் வருவதாக இருந்தது.
இந்த செய்தி இந்தியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதை தொடர்ந்து இலங்கை அரசு இந்தியாவை சமாதானப்படுத்த முயன்றது குறிப்பாக சீன கப்பல் சப்ளை மற்றும் எரிபொருள் பெறுவதற்காக தான் வருகிறது எனவும் கப்பலின் இயந்திர அமைப்புகள் அணைத்து வைக்கப்பட்டு இருக்கும் எனவும் இலங்கை அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்படி ஆகஸ்ட் 11 சீன கண்காணிப்பு கப்பல் இலங்கை வருவதாக இருந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இலங்கை அரசு தற்போது சீன கப்பல் இலங்கை வர அனுமதி மறுத்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை வெளியுறவு அமைச்சகம் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியது.
அந்த கடிதத்தில் Yuan Wang 5 கண்காணிப்பு கப்பலானது மறுதேதி மற்றும் அனுமதி அளிக்கப்படும் வரை இலங்கை கடற்பகுதிக்குள்ளாக அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் கம்போடியாவில் நடைபெற்று வரும் ஆசியான் நாடுகளின் சந்திப்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அல சப்ரி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரால் விவாதிக்கப்பட்டது.