இலங்கையில் சீன கண்காணிப்பு கப்பல் !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on இலங்கையில் சீன கண்காணிப்பு கப்பல் !!

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் Yuan Wang 5 எனப்படும் விண்வெளி மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பு கப்பல் வர உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகமானது இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது அதாவது வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சப்ளைகளை பெற வர உள்ளதாக செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி பேசும்போது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ள அனைத்தையும் கண்காணித்து வருவதாக கூறினார்.

இதனையடுத்து சீனா சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளும் கடல்சார் நடவடிக்கைகளில் தொடர்பில்லாத நாடுகள் தலையிட வேண்டாம் என மறைமுகமாக இந்தியாவை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கர்னல். நலின் ஹெரத் பேசும்போது இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிதில்ல கடந்த காலங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா , சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான இத்தகைய கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.