தாயை போலவே 27 வருடம் கழித்து சென்னையில் ராணுவ அதிகாரியான மகன் !!

  • Tamil Defense
  • August 2, 2022
  • Comments Off on தாயை போலவே 27 வருடம் கழித்து சென்னையில் ராணுவ அதிகாரியான மகன் !!

27 ஆண்டுகளுக்கு முன் மேஜர் ஸ்மிதா சதுர்வேதி (ஒய்வு) சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு செய்து இந்திய தரைப்படையில் லெஃப்டினன்ட் அந்தஸ்தில் அதிகாரியாக இணைந்தார்.

தற்போது அதே சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியை நிறைவு செய்து அவரது மகன் இந்திய தரைப்படையில் லெஃப்டினன்ட் அந்தஸ்தில் அதிகாரியாக தனது நாட்டு பணியை துவங்கி உள்ளார்.

அவருடன் 30 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 125 ஆண் அதிகாரிகளும், 41 பெண் அதிகாரிகளும் பயிற்சி நிறைவு செய்தனர், அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்டு மாலத்தீவு ராணுவ தலைமை தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

தாயை போலவே 27 ஆண்டுகள் கழித்து அதே பயிற்சி மையத்தில் இருந்து மகனும் பயிற்சி நிறைவு செய்து அதிகாரியாக பொறுப்பேற்று கொண்ட செய்தி சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.