ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் உள்ள சந்தன்வாரி என்ற இடத்தில் அமர்நாத் புனித யாத்திரையின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேருந்தில் 37 இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 2 ஜம்மு காஷ்மீர் காவல்துறை காவலர்கள் என ஒட்டுமொத்தமாக 39 பேர் பயணம் செய்தனர், சந்தன்வாரி பகுதியில் வந்த போது பேருந்தின் பிரேக் வேலை செய்யாத காரணத்தால் சாலையிலிருந்து விலகி அருகில் உள்ள ஆற்று படுகையில் பாய்ந்து உருண்டு விழுந்தது.
இதில் பேருந்து முற்றிலுமாக உருக்குலைந்து போனது, 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் மற்றுள்ளோர் கடுமையான காயங்களை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது, பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.