அமெரிக்கா உட்பட 6 நாடுகள் தேஜாஸ் போர் விமானத்தில் ஆர்வம் – இந்திய அரசு !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on அமெரிக்கா உட்பட 6 நாடுகள் தேஜாஸ் போர் விமானத்தில் ஆர்வம் – இந்திய அரசு !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலின்படி அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் தேஜாஸ் போர் விமானத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிலிப்பைன்ஸ், எகிப்து, இந்தோனேசியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இலகுரக சுதேசி தேஜாஸ் விமானத்தில் ஆர்வம் காட்டி உள்ளதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் இந்தியா சொந்மாக ஸ்டெல்த் போர் விமானம் தயாரித்து வருவதாகவும் ஆனால் திட்டத்தின் காலகெடு மற்றும் இதர விவரங்களை பாதுகாப்பு காரணங்கள் கருதி தெரிவிக்க முடியாது எனவும் கூறினார்.