ஆஃகானிஸ்தான் மீட்பு நடவடிக்கையின் போது பல அமெரிக்க ஆதரவாளர்களை கொன்ற அமெரிக்க ராணுவ அதிகாரி !!

  • Tamil Defense
  • August 29, 2022
  • Comments Off on ஆஃகானிஸ்தான் மீட்பு நடவடிக்கையின் போது பல அமெரிக்க ஆதரவாளர்களை கொன்ற அமெரிக்க ராணுவ அதிகாரி !!

அமெரிக்கா கடந்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய போது அமெரிக்கா தலைமையிலான படைகளுக்கு உதவிய பலரும் அங்கிருந்து ராணுவ விமானங்கள் மூலமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது அமேசானில் ஒளிபரப்பு ஆகி வரும் ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்று இந்த ஆஃகானிஸ்தான் வெளியேற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றியதாக உள்ளது.

இதில் அப்போது ஆஃப்கானிஸ்தானில் இயங்கி வந்த ஒரு அமெரிக்க சிறப்பு படை குழு அளித்த தகவல் ஒன்று ஒளிபரப்பபட்டு அது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது அமெரிக்க தரைப்படையின் 82ஆவது ஏர்போர்ன் படைப்பரிவை சேர்ந்த கர்னல் ஒருவர் அமெரிக்க படைகளுக்கு உதவியவர்களை விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றியதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க படைகளுக்கு உதவியவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஐந்து பேருந்துகளில் காபூல் விமான நிலையம் வந்தனர் அப்போது அமெரிக்க வீரர்கள் அவர்களை சோதனை செய்தனர் அவர்களில் பலருக்கு அமெரிக்க பாஸ்போர்ட் கூட இருந்ததாகவும்

ஆனால் மேற்குறிப்பிட்ட உயரதிகாரி தான் நினைத்தால் தான் விமான நிலையத்திற்கு உள்ளே நுழைய முடியும் என்பதை காட்ட ஐந்து பேருந்துகளில் அவர்களை ஏற்றி மீண்டும் விமான நிலையத்திற்கு வெளியே போகும்படி பணித்துள்ளார் அவர்களை அனைவரும் தாலிபான்களால் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் தற்போது வைரலாகி அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.