இந்திய பெருங்கடல் பகுதியை ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு !!
1 min read

இந்திய பெருங்கடல் பகுதியை ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு !!

இந்திய பெருங்கடல் பகுதியை ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்க சர்வதேச கப்பல் தொழில் கூட்டமைப்பு 10 ஆண்டுகளுக்கும் அதிகமான கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு முடிவு செய்துள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ள International Maritime Organisation IMO உடைய சர்வதேச கடல்சார் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இது பற்றி விவாதிக்க கப்பல் தொழில் கூட்டமைப்பு தனது பரிந்தரையை திங்கட்கிழமை அன்று அனுப்பி வைத்துள்ளது.

ICS International Chamber of Shipping, BIMCO, International Marine Contractors Association IMCA, INTERCARGO, INTERTANKO மற்றும் OCIMF Oil Companies International Marine Forum ஆகிய கூட்டமைப்புகள் இந்த பரிந்துரையை IMO விற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் வருகிற 2023ஆம் ஆண்டு முதல் இந்திய பெருங்கடல் ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இருந்து விலக்கு பெறும் ஆனாலும் தொடர்ந்து தற்போது கப்பல் நிறுவனங்களால் பின்பற்றி வரப்படும் BMP5 Best Management Practices அதாவது ஐந்து மேலாண்மை செயல்பாடுகள் அப்போதும் நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இதன் விளைவாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஹோர்மூஸ் வளைகுடா மற்றும் ஆஃப்ரிக்காவின் கொம்பு பகுதிகளை ஒட்டி பயணிக்கும் சர்வதேச கப்பல் நிறுவனங்களின் கப்பல்கள் இனி ஆபத்து குறைவான நிலைக்கு ஏற்றவாறு பயண முறைகளை மாற்றி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும்.