தைவானுக்கு அருகே 7 அமெரிக்க உளவு விமானங்கள்; சீனாவுக்கு குறியா ??

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on தைவானுக்கு அருகே 7 அமெரிக்க உளவு விமானங்கள்; சீனாவுக்கு குறியா ??

சீனா இரண்டாவது நாளாக தைவானை சுற்றி போர் ஒத்திகை நடத்தி வரும் நிலையில் மிகப்பெரிய அளவில் அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் தைவானுக்கு அருகே பறந்து கொண்டிருந்தது வெளியாகி உள்ளது.

அதாவது ஒரு U2 விமானம் உட்பட ஏழு உளவு விமானங்கள், ஆறு எரிபொருள் டேங்கர் விமானங்கள் ஆகியவை தைவானுக்கு மிகவும் அருகே பறந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு Boeing RC-135S, ஒரு Boeing RC-135V, மூன்று Boeing P-8A Poseidon, ஒரு Boeing E-3G sentry, ஒரு Lockheed U-2S என ஏழு உளவு விமானங்களும் ஆறு Boeing KC-135 எரிபொருள் டேங்கர் விமானங்களும் தான் அவை என்பது குறிப்பிடத்தக்கது.