ஜம்மு காஷ்மீரில் நடைபெறவிருந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் கட்டுபாட்டு காஷ்மீரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் பயங்கரவாதிகளுக்கு இறக்கி சென்ற மிகப்பெரிய ஆயுத குவியல் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுத குவியல் பற்றி சமீபத்தில் கைது செய்யப்பட்ட அலி எனும் பயங்கரவாதி மூலம் தெரிய வந்தது அவனை அடையாளம் காட்ட படையினர் கூட்டி சென்றனர் பின்னர் தப்பியோட முயன்ற போது ஒரு வீரரின் துப்பாக்கியை பறித்து சுட்டுள்ளான் இதில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார் இதனையடுத்து அலியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து சுட்டு கொன்றனர்.

மண்டல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத குவியலில் ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள், இரண்டு ஏகே-47 மேகஸின்கள் மற்றும் 40 ரவுண்டு கைத்துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவை உள்ளடங்கும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி அலி ஜம்மு காஷ்மீரில் உள்ள கோட் பல்வால் சிறைக்குள் இருந்து கொண்டே ஆளில்லா விமானங்களை இயக்கி பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத குழுக்கள் தரும் ஆயுதங்களை காஷ்மீருக்குள் கடத்தி வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.