முன்னர் BSF ஹீரோ இன்று வில்லன் பணிநீக்கத்தை எதிர்கொள்ள உள்ள அதிகாரி, பலிகடா ஆக்கப்பட்ட கதை!!

முன்னர் ஹீரோவாக கருதப்பட்ட BORDER SECURITY FORCE எல்லை பாதுகாப்பு படை அதிகாரி Assistant Commandant அனுபவ் ஆத்ரேயின் வாழ்க்கை தற்போது கீழ்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

நேஷனல் ஜியோகிராஃபிக் National Geographic தொலைக்காட்சியில் காட்சியிடப்பட்ட BSF First line of Defence நிகழ்ச்சியில் வந்து பிரபலமானவர் தான் Assistant Commandant அனுபவ் ஆத்ரே தற்போது ஒரு சிவிலியன் மரணத்தால் பெரும் சிக்கலில் உள்ளார்.

அதாவது 2016ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி BSF உளவுப்பிரிவுக்கு தங்கம் கடத்துவது பற்றிய துப்பு கிடைக்க அதனை மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் நாடியா கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த 113ஆவது பட்டாலியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உடனடியாக அதிகாரி அனுபவ் ஆத்ரே தலைமையில் அவர் உட்பட 7 வீரர்கள் 1 பம்ப் ஆக்ஷன் துப்பாக்கி மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகளுடன் ரோந்து சென்றனர்.
அப்போது வங்கதேச பகுதியில் தங்கம் கடத்தும் கும்பல் இந்திய எல்லையோரம் வந்ததை ரோந்து குழு கண்டது.

அப்போது ஆயுதமின்றி ஒரு எல்லை காவல்படை வீரர் அவர்களை தடுக்க சென்ற போது கடத்தல் கும்பல் அந்த வீரரை வங்கதேச எல்லைக்குள் இழுத்து கொலை செய்யலாம் என சத்தமிட்டதை ரோந்து குழுவினர் கேட்க அனுபவ் ஆத்ரே முதலில் வானை நோக்கி சுட்டார் ஆனால் கடத்தல் கும்பல் ஆக்ரோஷமாக செயல்பட துவங்கியது.

ஆபத்தை உணர்ந்த அனுபவ் ஆத்ரே 10 பேர் வெட்டு கத்திகளுடன் தனது கீழ் உள்ள வீரருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்தார் இதனையடுத்து அவர் உடனடியாக துப்பாக்கியை எடுத்து எல்லையோர முறைகளின்படி 50 மீட்டர் தொலைவில் இருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவனை சுட்டார் அதில் அவன் உயரிழந்தான் மேலும் அவன் பதின் வயது சிறுவன் என தெரிய வந்தது.

அந்த நேரத்தில் வங்கதேசத்தில் அலுவல் பயணமாக BSF படை தலைவர் ஷர்மா சென்றிருந்தார் அப்போது அவரிடம் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் கவலை தெரிவித்தார் இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காரணங்கள் விளக்கப்பட்டு அதனை வங்கதேச எல்லை பாதுகாப்பு படை ஏற்று கொண்டது.

ஆனாலும் வங்கதேச அரசியல் கட்சிகள் மற்றும் வங்கதேச ஊடகங்கள் இதனை வைத்து மிகப்பெரிய நாடகம் நடத்த இந்திய அரசு அதற்கு அடிபணிந்து வங்கதேச கடத்தல் கும்பலையும் ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த தனது நாட்டு வீரரை பலிகொடுக்க தயாரானது.

இத்தனைக்கும் BSF சரியான திட்டமிடல் இல்லை என மட்டும் கூறி விசாரணை அறிக்கையை சமர்பித்த நிலையில் பின்னர் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு கோர்ட் மார்ஷியல் எனும் பணி நீக்க நடவடிக்கையை அனுபவ் ஆத்ரே எதிர்கொள்ள தற்போது காத்திருக்கிறார்.

கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த அவர் துணை ராணுவ படை அதிகாரிகள் தேர்வில் இந்தியாவில் நான்காவது இடத்தில் தேர்ச்சி பெற்று 2010ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் இணைந்தார், தற்போது தான் அன்று எடுத்த முடிவை குறித்து இன்று தவறான முடிவை வாழ்க்கையில் எடுத்து விட்டதாக கவலைப்படுவதாக தெரிவித்தார்.

அனுபவ் ஆத்ரே மிகச்சிறந்த கமாண்டோ வீரர் ஆவார், அகில இந்திய அளவில் 4ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்ற நிலையில் கஷ்டமின்றி பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இணைய வாய்ப்பு கிடைத்தும் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் கடினமான பணியை மேற்கொள்ள எல்லை பாதுகாப்பு படையை தேர்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.