ரஷ்யாவில் நடைபெற்று வரும் ARMY – 2022 ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்ட ரஷ்ய ஃபெடரல் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் டிமித்ரி ஷூகாயெவ் மேம்படுத்தப்பட்ட Mig-29 போர் விமானங்களை விரைவாக டெலிவரி செய்ய உள்ளதாக உறுதி அளித்தார்.
மேலும் அவர் பேசும்போது Ka-226 T ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள், Igla-S மனிதர்கள் சுமக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள், மேலதிக Sukhoi-30 போர் விமானங்களை தயாரிப்பதற்கான பாகங்கள், Ka-31 ஹெலிகாப்டர்களின் டெலிவரி ஆகியவற்றிற்கான பணிகள் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு ரஷ்யாவின் Rosboronexport நிறுவனத்தின் தலைவர் 2023ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னதாக இந்தியாவுக்கான ஐந்து ரெஜிமென்ட் அளவிலான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை டெலிவரி செய்வதாக கூறிய ஒன்றிரண்டு நாட்களில் இந்த அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.