புதிய அமெரிக்க உளவு செயற்கைகோளை பின்தொடரும் ரஷ்ய ராணுவ செயற்கைகோள் !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on புதிய அமெரிக்க உளவு செயற்கைகோளை பின்தொடரும் ரஷ்ய ராணுவ செயற்கைகோள் !!

சமீபத்தில் ரஷ்யாவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராணுவ செயற்கைகோளான 14F150 Nivelir அமெரிக்காவின் USA-326 எனும் உளவு செயற்கைகோளை பின்தொடர்வதாக தெரிய வந்துள்ளது.

Kosmos-2558 எனவும் அழைக்கப்படும் அந்த ரஷ்ய ராணுவ செயற்கைகோளின் திறன்கள் பற்றிய எந்தவித தகவலும் தெரியவில்லை ஆனால் பிற செயற்கைகோள்களை கண்காணிக்கும் திறன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இரண்டு செயற்கைகோள்களும் Sun Synchronous Orbit சூரிய ஒத்திசைவு சுற்றுவட்ட பாதையில் இயங்கி வரும் நிலையில் ரஷ்ய செயற்கை கோள் அமெரிக்க செயற்கை கோளில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க செயற்கை கோள் NROL-87 என்கிற முக்கியமான தேசிய பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது இதன் காரணமாக தான் ரஷ்ய செயற்கைகோள் அதனை பின்தொடர்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ விண்வெளியில் ராணுவ திறன்களை அதிகரிக்கும் செயல்பாடுகளுக்கு இத்தகைய செயல்பாடுகள் வலுசேர்க்கும் என்றால் அது மிகையல்ல.