பனிப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் முதல்முறையாக ரஷ்ய ராணுவ தளம் ??

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on பனிப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் முதல்முறையாக ரஷ்ய ராணுவ தளம் ??

ஐரோப்பிய நாடான செர்பியாவில் ரஷ்யா ராணுவ தளம் ஒன்றை அமைக்க உள்ளதாக செர்பியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் போட்சன் கராசென்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் செர்பியாவில் ரஷ்யா ராணுவ தளம் அமைப்பது என்பது செர்பியாவின் உள்நாட்டு விவகாரம் குறிப்பாக அது ரஷ்யாவின் நலன் சார்ந்தது எனவும் கூறியுள்ளார்.

செர்பியா ரஷ்யாவின் நட்பு நாடு என்பதும் உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த நிலையில் செர்பியா தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் ரஷ்யா கிழக்கு ஜெர்மனி, போலந்து, ஃபின்லாந்து, ஹங்கேரி உள்ளிட்ட பல நாடுகளில் ராணுவ தளம் அமைத்த நிலையில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் தற்போது தான் ஐரோப்பாவில் ரஷ்ய ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.