மற்ற நாடுகளை விடவும் ரஷ்யாவின் ராணுவ பலம் சிறப்பானது புடின் !!

  • Tamil Defense
  • August 17, 2022
  • Comments Off on மற்ற நாடுகளை விடவும் ரஷ்யாவின் ராணுவ பலம் சிறப்பானது புடின் !!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் ARMY 2022 ராணு தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் ராணுவ போட்டிகள் நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் ரஷ்யாவின் ராணுவ திறன்கள் தங்களது எதிரி நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகளை விடவும் பன்மடங்கு சிறப்பு வாய்ந்தது எனவும்,

ரோபோட்டிக்ஸ், துல்லிய தாக்குதல் ஆயுதங்கள், கவச வாகனங்கள்,போர் விமானங்கள், பிரங்கிகள், ஆளில்லா விமானங்கள் என அதிநவீன ஆயுதங்களை ரஷ்ய ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து அசத்தி வருவதாகவும்

ரஷ்யாவுக்கு தென் அமெரிக்கா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆசியாவில் பல நட்பு நாடுகள் உள்ளதாகவும் இவர்களுக்கு ரஷ்ய ஆயுதங்களை விற்க உள்ளதாகவும் இதன் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை பன்மடங்கு வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசும்போது ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் அவற்றின் அதிநவீன தொழில்நுட்பம் எதிர்கால உலகின் ஆயுத தொழில்நுட்பத்தை பன்மடங்கு மாற்றியமைக்கும் எனவும் கூறினார்.