அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அருகே பறந்த ரஷ்ய ராணுவ விமானங்கள் !!

  • Tamil Defense
  • August 12, 2022
  • Comments Off on அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அருகே பறந்த ரஷ்ய ராணுவ விமானங்கள் !!

கடந்த மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு முறைகளில் NORAD அமைப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே ரஷ்ய கண்காணிப்பு விமானங்கள் பறந்ததை கண்டுபிடித்து உள்ளது.

NORAD – North American Air Defence command அதாவது வட மெரிக்க வான் பாதுகாப்பு கட்டளையகம் என்பது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டாக இருக்கும் அமைப்பாகும்.

இந்த அமைப்பு ரஷ்யாவில் இருந்து வரும் பலிஸ்டிக் ஏவுகணைகள் போர் விமானங்கள் ஆகியவற்றை கண்காணித்து தடுக்க உதவும் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.

இப்படியிருக்க கடந்த மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு முறைகளில் அலாஸ்கா மாகாணத்தின் வான் பாதுகாப்பு அடையாள எல்லைக்குள் ஊடுருவி பறந்ததை NORAD அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

ஆனாலும் ரஷ்ய விமானங்கள் சர்வதேச வான் பகுதியில் பறந்தன அமெரிக்க அல்லது கனடிய வான் பகுதிக்குள் நுழையவில்லை என்பதும் ரஷ்ய விமானங்களின் இந்த செயல்பாடு ஆபத்தானது அல்ல என்றும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி அலாஸ்கா வான் பாதுகாப்பு அடையாள எல்லையில் ஊடுருவிய ரஷ்ய விமானத்தை இடைமறிக்க அமெரிக்க விமானப்படையின் F-22 போர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.