க்ரைமியாவில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தின் மீது கடுமையான தாக்குதல்

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று க்ரைமியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஷ்யாவின் சாகி விமானப்படை தளத்தின் மீது மிகவும் கடுமையான தாக்குதல் நடைபெற்றுள்ளது இதன் செயற்கை கோள் படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான 8 விமானங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன ஆனால் ஒடுபாதைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வெடித்தல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சரியாக எப்படி இந்த தாக்குதல் நடைபெற்றது என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை உக்ரைன் பொறுபேற்கா விட்டாலும் உக்ரைன் மீதே பலரின் சந்தேகமும் உள்ளது.

கிளஸ்டர் குண்டுகளை உபயோகித்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் நிலையில் உக்ரைன் படைகளிடம் அத்தகைய ஆயுதங்கள் இல்லை எனவும் ஒருவேளை S-300 அமைப்புகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.