ரஷ்யாவின் புதிய அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் டிசைன் வெளியானது !!

  • Tamil Defense
  • August 17, 2022
  • Comments Off on ரஷ்யாவின் புதிய அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் டிசைன் வெளியானது !!

Arktur அதாவது ஆர்க்டூர் என பெயரிடப்பட்டுள்ள ரஷ்யாவின் புதிய அதிநவீன அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலின் டிசைன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் ARMY 2022 கண்காட்சியில் வெளியாகி உள்ளது.

இந்த ஆர்க்டூர் எனும் பெயர் ரஷ்ய மொழி வார்த்தை ஆகும் இதன் ஆங்கில வடிவம் ஆர்க்டாரஸ் Arctaurus ஆகும் பூட்டெஸ் நட்சத்திர கூட்டத்தை சேர்ந்த மிகவும் பிரகாசமான நட்சத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீர்மூழ்கி பற்றி அதிக தகவல்கள் இல்லை ஆனால் இது ரஷ்யாவின் வடக்கில் உள்ள குளிர் பிரதேசமான ஆர்டிக் பகுதியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது, இது ஸ்டெல்த் உடல் கட்டமைப்பை கொண்டுள்ளது.

மேலும் இந்த நீர்மூழ்கியில் அணு ஆயுத ஏவுகணைகளை செங்குத்தாக ஏவும் 12 ஏவுகுழாய்கள், முன்பகுதியில் 4 டார்பிடோ அதாவது நீன்டிகணைகளை ஏவும் குழாய்கள், நீர்மூழ்கி கப்பலின் பின்பகுதியில் இரண்டு Surrogat 5 எனப்படும் ஆளில்லா நீர்மூழ்கி கலன் ஆகியவை உள்ளன.

இந்த நீர்மூழ்கி கப்பல் மற்றும் Surrogat 5 ஆளில்லா நீர்மூழ்கி கலன் ஆகியவற்றை ரஷ்யாவின் புகழ்பெற்ற ருபின் Rubin Design Bureau வடிவமைத்துள்ளது இது அளவில் Borei ரக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலுக்கு இணையாக இருக்கும் என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.