விரைவில் புதிய ரஷ்ய நடமாடும் பிரங்கியின் சோதனை !!

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ரஷ்யாவின் புதிய நடமாடும் பிரங்கியின் சோதனைகள் நடைபெற உள்ளதாகவும் சோதனை நடத்த அனுமதி பெற ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட பிரங்கி Malva 152mm SPH அதாவது மால்வா 152mm நடமாடும் பிரங்கி என அழைக்கப்படுகிறது இதனை புரேவெஸ்ட்னிக் மத்திய ஆராய்ச்சி பல்கலைக்கழகம் வடிவமைத்து தயாரித்துள்ளது இது UralVagonZavod எனும் மிகப்பெரிய ரஷ்ய பாதுகாப்பு துறை நிறுவனத்தின் ஒரு பிரிவாகும்.

இந்த மால்வா நடமாடும் பிரங்கி 8×8 லாயியில் ஏற்கனவே ரஷ்ய படையில் உள்ள 2A64 பிரங்கி பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டதாகும், இந்த 2A64 பிரங்கி ஏற்கனவே Msta-S நடமாடும் பிரங்கியில் பயன்படுத்தி வரப்படுகிறது.

மால்வா நடமாடும் பிரங்கியின் எடை 32 டன்கள் எனவும் பல்வேறு வகையான 30 பிரங்கி குண்டுகளை சுமக்கும் எனவும் சுமார் 24.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.