தைவான் விவகாரம் ஒரே சீனா கொள்கைக்கு ரஷ்யா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஆதரவு !!
1 min read

தைவான் விவகாரம் ஒரே சீனா கொள்கைக்கு ரஷ்யா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஆதரவு !!

சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி சீனாவின் எதிர்ப்பையும் மீறி சுற்றுபயணமாக சென்றது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், வடகொரியா, கியூபா, போஸ்னியா ஹெர்சிகோவினா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ஒரே சீனா எனும் சீன கொள்கைக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ன.

மேலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் போஸ்னியா ஹெர்சிகோவினா நாடுகளை தவிர மற்ற நான்கு நாடுகளுமே அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து அறிக்க வெளியிட்டுள்ளன.

அதாவது அமெரிக்காவின் பொறுப்பற்ற செயல்பாடு காரணமாக இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் பதட்டம் ஏற்ப்டுள்ளதாகவும் அவை குற்றம்சாட்டி உள்ளன.