உயிரிழந்த உக்ரேனிய வீரர்களின் உடல்களை அனுப்பிய இரஷ்யா

  • Tamil Defense
  • August 28, 2022
  • Comments Off on உயிரிழந்த உக்ரேனிய வீரர்களின் உடல்களை அனுப்பிய இரஷ்யா

தற்போது இரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் நடந்து வரும் மோதலில் உயிரிழந்த 500 உக்ரேனிய வீரர்களின் உடல்களை இரஷ்யா உக்ரேனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த வீரர்களில் பெரும்பான்மையோர் உக்ரேனின் மரியுபோல் நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் என உக்ரேன் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த மரியுபோல் நகரத்தில் தான் உக்ரேனின் அசோவ் ரெஜிமென்ட் மற்றும் இரஷ்ய படைகள் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இரஷ்யா தற்போது மரியுபோல் நகரத்தை மறுகட்டுமானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இன்று வரை இரஷ்ய உக்ரேனிய போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போர் விமானங்கள் மூலம் தொடர் தாக்குதலில் இரஷ்ய படைகள் ஈடுபட்டு வருகின்றன.