சீரமைப்பு பணி முடிவுற்று மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் விக்ரமாதித்யா !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on சீரமைப்பு பணி முடிவுற்று மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் விக்ரமாதித்யா !!

கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய தடற்படையின் விமானந்தாங்கி போர் கப்பலான விக்ரமாதித்தயாவில் மிகவும் முக்கியமான மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் சில மாதங்களில் அந்த பணிகள் முடிவுற்று கப்பல் படையில் இணையும் என கூறப்படுகிறது.

இதுபற்றி ஒரு அதிகாரி கூறும்போது ஒரு கப்பல் அல்லது நீர்மூழ்கி இரண்டு ஆண்டுகள் தொடர் சேவைக்கு பிறகு இந்த மாதிரி மறுசீரமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படும், கலனுடைய அளவை பொறுத்து இரண்டு வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை இப்பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மற்றும் ஒர் மிகப்பெரிய நீண்ட கால மறுசீரமைப்பு பணி நடைபெறும் எனவும் அது நான்கு மாதங்கள் முதல் சுமார் ஒன்றரை வருடம் வரை நீடிக்கும் எனவும் அந்த அதிகாரி எடுத்துரைத்தார்.

அந்த வகையில் விமானந்தாங்கி கப்பல்கள் மிகப்பெரியவை ஆகையால் அவற்றிற்கான பராமரிப்பு காலமும் அதிகமாக இருக்கும் , அவை நீண்ட நாட்கள் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பிலேயே கழிக்கும் என மற்றொரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட விக்ரமாதித்தயா தற்போது இந்திய கடற்படையின் ஒரே விமானந்தாங்கி கப்பல் என்பதும் இப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது வேறு விமானந்தாங்கி கப்பல்கள் செயல்பாட்டில் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை இந்த மாதம் இந்திய கடற்படையில் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் படையில் இணையும் போது மாறும் அதன்பிறகு எப்போதும் எந்த நேரத்திலும் இந்திய கடற்படையில் விமானந்தாங்கி கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும் என்பது சிறப்பாகும்.