ஃபிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு தென்கொரிய 4.5ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் !!

ஃபிலிப்பைன்ஸ் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் கர்னல் மெய்னார்ட் மரியானோ சமீபத்தில் பேசும் போது ஃபிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு தென் கொரியாவின் KF-21 போர்விமானத்தை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த KF-21 BORAMAE தென்கரிய மற்றும் இந்தோனேசிய கூட்டு தயாரிப்பாகும், 60% தென்கொரிய அரசாலும், 20% இந்தோனேசிய அரசாலும் மீதமுள்ள 20% தென்கொரிய தனியார் நிறுவனங்கள் வசமும் உள்ளது.

இது பார்ப்பதற்கு ஸ்டெல்த் விமானம் போன்று இருந்தாலும் முழுமையான ஸ்டெல்த் விமானம் அல்ல காரணம் இதில் வழக்கமான விமானங்களை போல ஆயுதங்களை வெளிப்புறம் தான் இணைக்க முடியும், காலப்போக்கில் உள்புறம் ஆயுதங்களை வைக்கும் வகையிலான முழு ஐந்தாம் தலைமுறை விமானமாக மேம்படுத்தப்படும் என தெரிகிறது.

தற்போது ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை தனது MRFA Multi Role Fighter Acquisition அதாவது பல திறன் போர் விமான கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த KF-21 Boramae போர் விமானத்தை வாங்க விரும்புகிறது.

ஆனால் தற்போது இந்த விமானத்தை பெருமளவில் தயாரிக்க துவங்கவில்லை, 2026 ஆண்டு வாக்கில் தான் அந்த கட்டத்தை இந்த விமானம் எட்டும் மேலும் 2030ஆம் ஆண்டிற்கு பிறகு தான் இந்த விமானம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் ஆகவே ஃபிலிப்பைன்ஸ் இதனை வாங்க விரும்பினால் 2030ஆம் ஆண்டிற்கு பிறகு தான் இந்த விமானங்களை வாங்க முடியும் என கூறப்படுகிறது.

ஆகவே தற்போதுள்ள Horizon -2 கொள்முதல் திட்டத்தில் இந்த போர் விமானங்களை வாங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு, இனி வரப்போகும் Horizon-3 திட்டத்தின் கீழ் தான் இந்த விமானங்கள் வாங்கப்படும் என தெரிகிறது மேலும் கர்னல் மரியானோ இதற்கான பட்ஜெட் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார்.

ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை தரை தாக்குதல் மற்றும் பல திறன் போர் விமானங்கள், முன்னனி ஜெட் பயிற்சி விமானம் ஆகியவற்றை தனது Horizon-3 கொள்முதல் திட்டத்தின் கீழ் வாங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.