பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து JF-17 எனும் போர் விமானத்தை தயாரித்தது, தற்போது பாகிஸ்தானிலேயே அதனை தயாரித்து தனது படையில் இணைத்து வருகிறது இந்த போர் விமானங்களில் ரஷ்யா Klimov நிறுவனம் தயாரிக்கும் Klimov RD 93 என்ஜின்கள் பயன்படுத்தி வரப்படுகின்றன.
ரஷ்யாவின் Rosboronexport நிறுவனம் தான் இந்த என்ஜின் அதன் உதிரி பாகங்களின் ஏற்றுமதி மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட இதர சேவைகளை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வழங்க Klimov நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும்.
சீனா முன்னர் ரஷ்யாவின் Rosboronexport நிறுவனத்திடம் இருந்து வாங்கி பாகிஸ்தானுக்கு சப்ளை செய்து வந்தது பின்னர் பாகிஸ்தான் சீனா மூலமாக வாங்குவதை தவிர்த்து விட்டு நேரடியாக ரஷ்யாவை தொடர்பு கொண்டு இந்த என்ஜின்களை வாங்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க அரசு ரஷ்யாவின் Rosboronexport நிறுவனத்தின் மீது அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய தடைகள் விதித்தது. இதனால் தற்போது பாகிஸ்தான் JF-17 விமானங்களை தயாரிக்க திணறி வருகிறது.
தற்போது ரஷ்ய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அரசுகள் மற்றும் இருதரப்பு வங்கிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.