இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நன்கொடை அளித்த ஒசாமா பின்லாடன் குடும்பம் !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நன்கொடை அளித்த ஒசாமா பின்லாடன் குடும்பம் !!

கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஒசாமா பின்லாடனின் ஒன்றுவிட்ட சகோதரர் பகரை சந்தித்து சுமார் 9.5கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை பெற சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது இளவரசர் சாரலஸ் நடத்தி வரும் Prince of Wales Charitable Fund எனும் நிதியகத்திற்கு மேற்குறிப்பிட்ட பணத்தை நன்கொடையாக பெற சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது இது சரியான சட்டவிதிகளுக்கு உட்பட்டது எனவும் இளவரசன் சாரல்ஸ் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஃபெப்ரவரி மாதம் இங்கிலாந்து காவல்துறை இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் இதே போன்ற நிதியகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை ஒட்டி விசாரணை நடத்தியதும்

இந்த சம்பவத்தில் மஹ்ஃபூஸ் மாரெ முபாரக் பின் மஹ்ஃபூஸ் எனும் ஒரு மிகப்பெரிய சவுதி அரேபிய பணக்காரருக்கு இதில் தொடர்பு இருப்பதும், இளவரசர் சார்லஸின் பல்வேறு திட்டங்களுக்கு நன்கொடை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.