ஒமன் மற்றும் இந்திய தரைப்படையினர் ராஜஸ்தானில் கூட்டு பயிற்சி !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on ஒமன் மற்றும் இந்திய தரைப்படையினர் ராஜஸ்தானில் கூட்டு பயிற்சி !!

Exercise Al Najah-4 அல் நஜாஹ்-4 கூட்டு ராணுவ பயிற்சியில் கலந்து கொள்ள ராயல் ஒமன் தரைப்படையின் பாராசூட் படைவீரர்கள் 60 பேர் இந்தியா வந்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த கூட்டு பயிற்சிகள் இந்த முறை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மஹாஜன் படை தளத்தில் நடைபெறுகிறது கடந்த முறை ஒமன் தலைநகர் மஸ்கட்டில் இந்த பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சியின் போது பயங்கரவாத ஒழிப்பு, பிராந்திய பாதுகாப்பு, அமைதிபடை செயல்பாடுகள், கூட்டு செயல்பாடுகள், உடற்பயிற்சி முறைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

13 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டு பயிற்சியில் கடைசி இரண்டு நாட்களும் செயல்திறனை பரிசோதிக்கும் தேர்வு நடத்தப்படும், இந்த பயிற்சியில் இந்திய தரைப்படையின் 18ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படையணி பங்கு பெறுவது கூடுதல் தகவல் ஆகும்.