அமெரிக்க சபாநாயகரின் தைவான் விஜயம்; எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on அமெரிக்க சபாநாயகரின் தைவான் விஜயம்; எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா !!

சமீபத்தில் தைவான் நாட்டிற்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி பயணம் மேற்கொண்டதற்கு வடகொரியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

வடகொரிய வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும்,

அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ செயல்பாடுகள் இந்த பிராந்தியத்தில் அமைதியை சீர்கெடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது என காட்டமாக விமர்சித்து உள்ளது.

மேலும் சீனாவின் ஒரே சீனா கொள்கையை வடகொரியா அதரிப்பதாகவும், தைவான் விவகாரத்தில் சீனாவுடன் நிற்பதாகவும் அந்த செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.